/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பென்ஷன் கிடைக்க சிறப்பு முகாமுக்கு அழைப்புபென்ஷன் கிடைக்க சிறப்பு முகாமுக்கு அழைப்பு
பென்ஷன் கிடைக்க சிறப்பு முகாமுக்கு அழைப்பு
பென்ஷன் கிடைக்க சிறப்பு முகாமுக்கு அழைப்பு
பென்ஷன் கிடைக்க சிறப்பு முகாமுக்கு அழைப்பு
ADDED : ஆக 28, 2011 01:08 AM
குன்னூர் : நீலகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க மாவட்ட பொது செயலர் சேகரன், பொரு ளாளர் சிவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை;மாநில அரசு, மாற்று திறனாளிகளுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.
மாத பென்ஷன் திட்டத்தின் கீழ் மாதம் 1,000 ரூபாய், குறிப்பிட்ட சதவீத ஊனமுள்ள சிலருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. குன்னூர் தாலுகாவில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மாநில அரசின் பென்ஷன் தொகையை பெற்று தர சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அரசு நிர்ணயித்துள்ள தகுதியின் அடிப்படையில் இதுவரை பென்ஷன் பெறாத அனைத்து மாற்றுத் திறனாளிகளும் முகாமில் பங்கேற்கலாம். அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் குன்னூர் தாலுகாவிற்குட்பட்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும், குன்னூர் பஸ் ஸ்டாண்டு பின்புறமுள்ள சங்க அலுவலகத்திற்கு, தங்களின் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் வந்து பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு விபரம் தேவைப்படுவோர் '8098394959' என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது


