ஹசாரே உடல்நிலை டாக்டர்கள் திருப்தி
ஹசாரே உடல்நிலை டாக்டர்கள் திருப்தி
ஹசாரே உடல்நிலை டாக்டர்கள் திருப்தி
ADDED : ஆக 31, 2011 01:16 AM

குர்கான் : 'அன்னா ஹசாரேயின் உடல் நிலை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது'என, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறினர்.
ஊழலுக்கு எதிராக, 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே, தற்போது, டில்லி அருகே, குர்கானில் உள்ள 'மெடென்டா' மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் யாதின் மேத்தா கூறியதாவது: அன்னா ஹசாரேயின் உடல் நிலை சீராக உள் ளது. அவருக்கு, படிப்படியாக, திரவ உணவு கொடுக்கப்பட்டு வந்தது. இன்று (நேற்று) அவருக்கு அவல் உணவு கொடுக்கப்பட்டது. அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள்ளேயே, சிறிது நேரம் நடை பயிற்சி மேற்கொண்டார். அவரது ரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவை சீராக உள்ளன. உடல் எடை 66.5 கிலோவாக உள்ளது. ஒட்டு மொத்தமாக, அவரது உடல் நிலை, திருப்தி அளிக்கிறது. இவ்வாறு மேத்தா கூறினார். நலம் பெற வாழ்த்து: இதற்கிடையே, ஹசாரே உடல் நலம் பெற, வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங் சார்பில், பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர், மருத்துவமனைக்கு சென்று, ஹசாரேயிடம் மலர்க்கொத்து கொடுத்தார்.


