/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு பாராட்டுசிவகங்கை நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு பாராட்டு
சிவகங்கை நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு பாராட்டு
சிவகங்கை நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு பாராட்டு
சிவகங்கை நகராட்சியில் கவுன்சிலர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 16, 2011 11:09 PM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சி கடைசி கூட்டம் நேற்று நடந்தது.
தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் செல்வரங்கன், காங்., மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் 27 வார்டுகளில் நடந்த நலத்திட்டப்பணிகளுக்கு நன்றி தெரிவித்தனர். நாகராஜன் பேசுகையில், '' ஐந்து ஆண்டுகளாக நகராட்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆணையாளர், அதிகாரிகள், கவுன்சிலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
20 கோடி ரூபாயில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம், 30 கோடி ரூபாயில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம், 15 கோடியில் புதிய தார்சாலை, 5 கோடியில் சிமென்ட் சாலை, 2 கோடியில் நடைபெற்று வரும் மின் மயான எரியூட்டு நிலையம், 1 கோடியில் நடைபெற்று வரும் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம், 1.50 கோடியில் நகராட்சிக்கு புதிய கட்டடம் உள்ளிட்ட பணிகளில் ஒத்துழைப்பு தந்த அனைத்து கவுன்சிலர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.