வேஷ்டி கட்டிய விவசாயியை அனுமதிக்க மறுத்த வணிக வளாக பாதுகாவலர்கள்
வேஷ்டி கட்டிய விவசாயியை அனுமதிக்க மறுத்த வணிக வளாக பாதுகாவலர்கள்
வேஷ்டி கட்டிய விவசாயியை அனுமதிக்க மறுத்த வணிக வளாக பாதுகாவலர்கள்
ADDED : ஜூலை 17, 2024 03:06 PM

பெங்களூரு: வணிக வளாகத்தில் வேஷ்டி கட்டி வந்ததற்காக உள்ளே அனுமதிக்க மறுத்த பாதுகாவலர்களுக்கு இணையதளவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அவர்கள் மன்னிப்பு கோரினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செயல்படும் ஜிடி மால் என்ற வணிகவளாகத்தில் உள்ள திரையரங்கிற்கு வயது முதிர்ந்த விவசாயி ஒருவர், மகனுடன் வந்தார். அந்த முதியவர் வேஷ்டி அணிந்து இருந்தார். வாசலில் அவரை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள், வேஷ்டி கட்டி வந்தால் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனக்கூறி திருப்பி அனுப்பினர். பேன்ட் அணிந்து வந்தால் உள்ளே செல்லலாம் என்றனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பரவ துவங்கியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்க துவங்கினர். வணிக வளாகம் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து பாதுகாவலர்கள் தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரி உள்ளனர்.