Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கடந்த தேர்தலில் டூரிஸ்ட்போல வந்தவர் கூட வெற்றி

கடந்த தேர்தலில் டூரிஸ்ட்போல வந்தவர் கூட வெற்றி

கடந்த தேர்தலில் டூரிஸ்ட்போல வந்தவர் கூட வெற்றி

கடந்த தேர்தலில் டூரிஸ்ட்போல வந்தவர் கூட வெற்றி

ADDED : செப் 25, 2011 09:56 PM


Google News
ராஜபாளையம்:''கடந்த தேர்தலில் வேட்பாளர்களிடம் ஜாதி, செலவு பணம் குறித்து கேட்டதால், டூரிஸ்ட்டாக வந்தவர்கள் கூட வெற்றி பெற்றனர்'' என தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் ராஜபாளையத்தில் நேற்று பேசினார்.ராஜபாளையம் நகராட்சி தலைவர் வேட்பாளர் அறிமுக மற்றும் ஊழியர் கூட்டத்திற்கு ராஜன் முன்னாள் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். நகர் செயலாளர் உதயசூரியன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் தனுஷ்கோடி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜஅருண்மொழி, பொதுக்குழு உறுப்பினர்கள் ரூசோ, கனகராஜ் முன்னிலை வகித்தனர்.

வேட்பாளர் சுமதியை, மாநில இலக்கிய அணிசெயலாளர் அமுதன் அறிமுகம் செய்தார். சாத்தூர் ராமசந்திரன் பேசுகையில், ''தனித்து போட்டி, சுயபரிசோதனை செய்ய வாய்ப்பு. தற்போது கட்சிக்காரரா, போட்டியிடு என்கிறோம். கடந்த தேர்தலில் ஜாதி, செலவு பணம் குறித்து கேட்டது தான் பிரச்னை.45 ஆயிரம் பேர் உள்ளனர் என அந்த ஜாதி வேட்பாளரை தேர்வு செய்தோம், ஆறு ஆயிரம் பேர் உள்ள ஜாதிக்காரர் வென்றார். சில இடங்களில் டூரிஸ்ட்டாக வந்தவர்கள் எல்லாம் வெற்றி பெற்றனர். ஜாதி, பணத்தை மீறி இது நடந்து உள்ளது. எதிரணி உடைவதால், நமது பலம் கூடுகிறது. தி.மு.க., வலிமையை நிருபிக்கும் தேர்தல். கடந்த தேர்தலில் மக்கள் ஏமாற்றினர், யாரையும் திட்டாதீர்கள். தாமிரபரணி குடிநீர், ரயில்வே மேம்பால வசதியை கூறி ஓட்டு கேளுங்கள்'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us