Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உதயநிதி ஆட்சியில் மாணவிகளுக்கு 'பைக்': இப்போதே அடிபோடும் பொன்முடி

உதயநிதி ஆட்சியில் மாணவிகளுக்கு 'பைக்': இப்போதே அடிபோடும் பொன்முடி

உதயநிதி ஆட்சியில் மாணவிகளுக்கு 'பைக்': இப்போதே அடிபோடும் பொன்முடி

உதயநிதி ஆட்சியில் மாணவிகளுக்கு 'பைக்': இப்போதே அடிபோடும் பொன்முடி

ADDED : ஜூலை 29, 2024 05:29 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

விழுப்புரம்: தமிழக முதல்வராக ஸ்டாலின் இருக்கும் நிலையில், இப்போதே அவரது மகன் உதயநிதிக்கு 'ஐஸ்' வைக்கும் விதமாக அமைச்சர் பொன்முடி பேசியுள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோதே, அடுத்ததாக திமுக தலைவராக அவரது மகன் ஸ்டாலின் தான் வருவார் எனத் தெரிந்து, பல மூத்த அமைச்சர்களும் அவரை பாராட்டி பேசிவந்தனர். அதேபோல், ஸ்டாலினும் திமுக தலைவரானார். அதன்பின்னர், முதல்வராவதற்கு முன்னர் ஸ்டாலின் புகழ்பாடும் வழக்கம் அதிகமானது. தற்போது முதல்வர் ஆனதும் சிறிதுகாலம் ஸ்டாலினை புகழ்ந்து பேசியவர்கள் அனைவரும் அவரது மகன் உதயநிதியை புகழ்பாட துவங்கினர்.

தங்களது பதவியை தக்க வைக்கவும், அடுத்தடுத்த தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்கவும் உதயநிதிக்கு 'ஐஸ்' வைப்பதை தொடர்ந்தனர். குறிப்பாக கருணாநிதி ஆட்சியில் இருந்து அமைச்சராக இருக்கும் மூத்தவர்கள் கூட தற்போது உதயநிதியை புகழ்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதன் வெளிப்பாடாக, விழுப்புரம் அருகே அரசுப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, ''உதயநிதி ஆட்சியில் மாணவிகளுக்கு பைக் வழங்கும் காலம் வரும்'' எனத் தெரிவித்தார். ஸ்டாலினுக்கு அடுத்ததாக உதயநிதியை முதல்வராக்க இப்போதிருந்தே அடிபோடுவதாகவே இதனை அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us