இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.70 கோடி போதைப்பொருள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.70 கோடி போதைப்பொருள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.70 கோடி போதைப்பொருள் பறிமுதல்
ADDED : ஜூலை 29, 2024 05:24 PM

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் ரூ.70 கோடி மதிப்புள்ள 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு தென்மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி அரவிந்தன் தலைமையிலான அதிகாரிகள் விரைந்தனர்.
ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மான் மற்றும் இப்ராஹிம், மன்சூர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் செங்குன்றம் அருகே குடோனில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.