Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/போஸ்டர்களில் அச்சக பெயர் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

போஸ்டர்களில் அச்சக பெயர் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

போஸ்டர்களில் அச்சக பெயர் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

போஸ்டர்களில் அச்சக பெயர் போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

ADDED : ஆக 22, 2011 02:24 AM


Google News
மதுரை, : மதுரையில் போஸ்டர்கள், பிளக்ஸ் போர்டுகளில் அச்சக பெயர் இல்லை என்றால் ரூ.2 ஆயிரம் அபராதம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை கிடைக்கும் என போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது : மத, ஜாதி சம்பந்தப்பட்ட, கட்சிகள், இயக்கங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.

பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுகின்றன. இதில் அச்சகம் அல்லது நிறுவனத்தின் பெயர், முகவரி, டெலிபோன் எண் இருப்பதில்லை. அச்சு மற்றும் புத்தகப்பதிவு சட்டம் 1867ன்படி, அச்சிட்டோருடைய பெயர், இடம் இல்லை என்றால், ரூ.2 ஆயிரம் அல்லது ஆறு மாத சிறை விதிக்கப்படும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இனி போஸ்டர், பிட் நோட்டீஸ், விளம்பர நோட்டீஸ், பிளக்ஸ் போர்டு போன்றவற்றில் அச்சக நிறுவனத்தின் விபரங்களை வெளியிட வேண்டும் என அச்சகம், பிளக்ஸ் போர்டு தயாரிப்பாளர்கள் மற்றும் பதிவு இயந்திர நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us