Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ போர் நிறுத்தம் எதிரொலி; ரஷ்யா - உக்ரைன் பிணைக் கைதிகள் பரஸ்பர விடுவிப்பு

போர் நிறுத்தம் எதிரொலி; ரஷ்யா - உக்ரைன் பிணைக் கைதிகள் பரஸ்பர விடுவிப்பு

போர் நிறுத்தம் எதிரொலி; ரஷ்யா - உக்ரைன் பிணைக் கைதிகள் பரஸ்பர விடுவிப்பு

போர் நிறுத்தம் எதிரொலி; ரஷ்யா - உக்ரைன் பிணைக் கைதிகள் பரஸ்பர விடுவிப்பு

ADDED : மார் 19, 2025 10:14 PM


Google News
Latest Tamil News
கீவ்: ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், இருநாடுகளில் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தது. அமெரிக்க அதிபராக பொறுப்பெற்ற டொனால்டு டிரம்ப், இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இருப்பினும், போர் நிறுத்தத்திற்கு தயார் என்று ஜெலன்ஸிகி தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, சவுதி அரேபியாவில், அந்நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சில், இரு நாட்டு எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்காமல் இருப்பதற்கான 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு, ரஷ்யா ஒப்புக் கொண்டது. இதையடுத்து, ரஷ்ய அதிபர் புடினை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக விரிவான பேச்சு நடத்தினார். மேலும், இருதரப்பிலும் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகி தொலைபேசியில் தொடர்பு பேசியுள்ளார். அப்போது, போர் நிறுத்தம் குறித்து த்தில் ரஷ்ய அதிபர் புடின் கூறியது பற்றி கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, போரின் போது சிறைபிடிக்கப்பட்ட 175 உக்ரைன் கைதிகள் மற்றும் பலத்த காயமடைந்த 22 பேரையும் விடுவித்து விட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல, 175 ரஷ்ய கைதிகளும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், 'ரஷ்ய ராணுவ வீரர்கள் பெலாரஸில் உள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ள தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன,' எனக் கூறியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us