காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவை நுழைக்க பாக்., ஐ.எஸ்.ஐ.,சதி: கண்டுபிடித்தது எப்.பி.ஐ.,
காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவை நுழைக்க பாக்., ஐ.எஸ்.ஐ.,சதி: கண்டுபிடித்தது எப்.பி.ஐ.,
காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவை நுழைக்க பாக்., ஐ.எஸ்.ஐ.,சதி: கண்டுபிடித்தது எப்.பி.ஐ.,
வாஷிங்டன் : காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க கொள்கையை நுழைப்பதற்காக, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்பு பல மில்லியன் டாலர்களை வாரி இறைத்துள்ளது.இது கடந்த 20 ஆண்டுகளாக நடந்துள்ளதை அமெரிக்க புலனாய்வு கூட்டமைப்பு (எப்.பி.ஐ.,) கண்டுபிடித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள காஷ்மீர் அமெரிக்க கவுன்சிலின் இயக்குனராக இருப்பவர் குலாம் நபி பாய், 62. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண, இக்கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இவரும், அமெரிக்கரான ஜகீர் அகமத், 63, என்பவரும், காஷ்மீர் விஷயத்தில் அமெரிக்க கொள்கையை நுழைப்பதற்காக, கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில், அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யிடம் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் 46 லட்சம் ரூபாய் பெற்று வந்த விஷயம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இக்குற்றச்சாட்டின் கீழ், பாயை அமெரிக்க புலனாய்வு அமைப்பு கைது செய்து, அலெக்சாண்டிரியா கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. இதுதொடர்பாக, அவர் மீது, அமெரிக்க புலனாய் கூட்டமைப்பு வழக்கு தொடுத்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க புலனாய்வு கூட்டமைப்பின் சிறப்பு ஏஜென்ட் சாரா வெப் லிண்டென் கூறுகையில், 'பாகிஸ்தான் அரசின் உத்தரவின் கீழ், நிதியுதவி பெற்று, காஷ்மீர் விஷயத்தில் அந்நாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இவருக்கு மட்டுமின்றி, அமெரிக்காவில் தொடர்பை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் நிதியுதவி செய்துள்ளது' என்றார்.