/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/காட்பாடி ரயில்வே கேட் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்காட்பாடி ரயில்வே கேட் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்
காட்பாடி ரயில்வே கேட் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்
காட்பாடி ரயில்வே கேட் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்
காட்பாடி ரயில்வே கேட் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்
ADDED : ஆக 03, 2011 10:15 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் உள்ள காட்பாடி ரயில்வே கேட் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது.
விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காட்பாடி ரயில்வே கேட் பகுதியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை, செஞ்சி, திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் காட்பாடி ரயில்வே கேட்டை தாண்டித்தான் செல்ல வேண்டியுள்ளது. இந்த வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் ரயில்வே கேட் பள்ளத்தில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களும், இந்த பள்ளத்தில் சிக்கி படாதபாடு படுகின்றன. வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்ற இந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.