தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
ADDED : ஜூலை 24, 2024 05:23 PM

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது '' என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: காங்., ஆட்சி காலத்தை விட, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 1,302 கி.மீ., தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
ரூ.33,467 கோடி செலவில் 2,587 தொலைவுக்கு புதிய ரயில்வே திட்டங்கள் நடக்கின்றன. 10 ஆண்டுகளில் 687 பாலங்கள், ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது.1,302 தொலைவிற்கு தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை கடற்கரை - எழும்பூர் 4வது வழித்தட திட்டத்திற்கு நிலம் கையகபடுத்துவதில் தமிழக அரசு தாமதம் செய்கிறது . மாநிலத்தில் பல்வேறு ரயில் திட்டங்களை நிறைவேற்ற 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தற்போது வரை 879 ஏக்கர் நிலம் மட்டுமே கையகபடுத்தப்பட்டு உள்ளது.
சென்னை கடற்கரை, எழும்பூர், செங்கல்பட்டு, கிண்டி உள்ளிட்ட 77 ரயில் நிலையங்கள் ‛ அம்ரித்' திட்டத்தின் அதிநவீன வசதிகளுடன் நவீனமாக மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.