"பயங்கரவாதிகளுக்கு சிறை அல்லது நரகம் தான்": பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து மத்திய அமைச்சர் பதில்
"பயங்கரவாதிகளுக்கு சிறை அல்லது நரகம் தான்": பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து மத்திய அமைச்சர் பதில்
"பயங்கரவாதிகளுக்கு சிறை அல்லது நரகம் தான்": பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து மத்திய அமைச்சர் பதில்
ADDED : ஜூலை 24, 2024 05:14 PM

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார்.
கடந்த சில தினங்களாக காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் எம்.பி பிரமோத் திவாரி ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு நித்யானந்த் ராய் அளித்த பதில்: பயங்கரவாதிகளின் தாக்குதல் விரைவில் முடிவுக்கு வரும். பயங்கரவாதிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். கடந்த சில நாட்களில், ஜம்மு காஷ்மீரில் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சில பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
ஒழிப்போம்
370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, சுமார் 900 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் கொன்றுள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிப்போம் என நான் சபைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீரில் 7,217 பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்துள்ளன. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் 2,259 ஆகக் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.