ADDED : ஜூலை 12, 2011 12:24 AM
திருச்சி: ஈரோட்டைச் சேர்ந்த மகரிஜான் மகன் தவ்ரின் ஆலம் (10) திருச்சி
மன்னார்புரத்தில் உள்ள மதரஸாவில் படித்தார்.
அங்குள்ள விடுதியில்
தங்கியிருந்தார். நேற்று தொழுகைக்காக சென்ற அவர், மீண்டும் விடுதிக்கு
திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விடுதி வார்டன் சையது
திவான் கொடுத்து புகாரின்பேரில், கே.கே.நகர் போலீஸார் தவ்ரின் ஆலத்தை
தேடுகின்றனர். * பொன்மலை ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சுந்தர் (33).
திருப்புவனம் ரெயில்வே அலுவலகத்தில் பணியாற்றினார். வேலைக்கு சென்ற சுந்தர்
இதுவரை வீடு திரும்பவில்லை. பொன்மலை போலீஸார் விசாரிக்கின்றனர்.