Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!

மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!

மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!

மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!

ADDED : மார் 14, 2025 12:11 PM


Google News
Latest Tamil News
சென்னை: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் வழங்கப்படும்; 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தனர். அவர்களது கோரிக்கைகளில் முக்கியமானது, மீண்டும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்ய அனுமதித்து பணப்பலன் வழங்க வேண்டும் என்பது தான்.இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெற முடியும்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்!

* வரும் நிதி ஆண்டில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

* இலங்கை தமிழர் நலனுக்காக 3 ஆயிரம் வீடுகள் ரூ.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

* கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு

* பழமையான தேவாலயம், தர்காக்களை புதுப்பிக்க தலா ரூ.10 கோடி

* புராதான கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி

* 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.

* மாநில அரசின் ஆண்டு வரி வருவாய் 14.6 சதவீதம் வளர்ச்சி பெறும்

* வரும் நிதியாண்டில் மாநில வரி வருவாய் 2.21 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

* வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாகுறை விகிதம் குறையும்.

* 5 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் வழங்கப்படும்; 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம்.

* 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us