/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாநில அளவிலான வாலிபால் போட்டி பட்டிவீரன்பட்டி, ஈரோடு அணி வெற்றிமாநில அளவிலான வாலிபால் போட்டி பட்டிவீரன்பட்டி, ஈரோடு அணி வெற்றி
மாநில அளவிலான வாலிபால் போட்டி பட்டிவீரன்பட்டி, ஈரோடு அணி வெற்றி
மாநில அளவிலான வாலிபால் போட்டி பட்டிவீரன்பட்டி, ஈரோடு அணி வெற்றி
மாநில அளவிலான வாலிபால் போட்டி பட்டிவீரன்பட்டி, ஈரோடு அணி வெற்றி
ADDED : ஆக 22, 2011 11:25 PM
திருப்பூர் : திருப்பூரில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில், பட்டிவீரன்பட்டி என்.எஸ்.எஸ்.வி., அணி மற்றும் ஈரோடு பாரதி வித்யாபவன் அணிகள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றின.
மாநில அளவிலான வாலிபால் போட்டி, அபாகஸ் சர்வதேச மாண்டிசோரி பள்ளியில் நடந்தது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இப்போட்டியில், ஆண்கள் பிரிவில், 20 அணிகள், பெண்கள் பிரிவில் எட்டு அணிகள் பங்கேற்றன. காலிறுதி ஆட்டத்தின் முடிவில், ஆண்கள் பிரிவில், பட்டிவீரன்பட்டி என்.எஸ்.எஸ்.வி., அணி, தஞ்சாவூர் கமலா சுப்ரமணியம் மெட்ரிக் பள்ளி அணி, சேலம் கோகுலநாதா மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை டி.பி.டி.ஆர்., அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. பெண்கள் பிரிவில், ஈரோடு பாரதி வித்யாபவன் அணி, சேலம் புனிதஜோசப் மகளிர் பள்ளி அணி, கோவை அல்வேர்னியா அணி, சேலம் சாரதா வித்யாலயா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதிக்கு பின் நடந்த லீக் போட்டியில், ஆண்கள் பிரிவில், பட்டிவீரன்பட்டி என்.எஸ். எஸ்.வி., அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, 'எய்ம்ஸ்' சுழற்கோப்பையை வென்றது. இரண்டு சுற்றில் வென்று, சேலம் கோகுலநாதா பள்ளி அணி இரண்டாம் இடத்தை பெற்றது. பெண்கள் பிரிவில், ஈரோடு பாரதி வித்யாபவன் அணி, மூன்று போட்டிகளில் வென்று, பெண்களுக்கான சுழற்கோப்பையை வென்றது. இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்று, கோவை அல்வேர்னியா அணி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது. சேலம் கோகுலநாதா பள்ளி அணியை சேர்ந்த வீரர் அமீத்கான் மற்றும் சேலம் புனிதஜோசப் மக ளிர் பள்ளி அணியை சேர்ந்த மாணவி ஹேமா ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலர் பழனிசாமி பதக்கங்களை வழங்கினார். அபாகஸ் பள்ளி தாளாளர் வெங்கடாசலம் குழுக்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் கேமந்த்குமார் ராபர்ட், செயலாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


