/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சீவலப்போரி துர்காம்பிகா கோயிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை மகோத்ஸவம் துவக்கம்சீவலப்போரி துர்காம்பிகா கோயிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை மகோத்ஸவம் துவக்கம்
சீவலப்போரி துர்காம்பிகா கோயிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை மகோத்ஸவம் துவக்கம்
சீவலப்போரி துர்காம்பிகா கோயிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை மகோத்ஸவம் துவக்கம்
சீவலப்போரி துர்காம்பிகா கோயிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை மகோத்ஸவம் துவக்கம்
ADDED : ஆக 01, 2011 02:07 AM
திருநெல்வேலி : சீவலப்பேரி துர்காம்பிகா கோயிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை
மகோத்ஸவம் துவங்கியது.சீவலப்பேரி துர்காம்பிகா கோயிலில் ஆடிப்பூர
லட்சார்ச்சனை மகோத்ஸவம் நேற்று காலை துவங்கியது.
காலை 5 மணிக்கு கணபதி
ஹோமமும், 9.15 மணிக்கு லட்சார்ச்சனையும் நடந்தது. தொடர்ந்து தீப
ஆராதனையும், லட்சார்ச்சனையும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள்
சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று(1ம் தேதி) காலை 8 மணிக்கு லட்சார்ச்சனையும்,
மதியம் 1 மணி,இரவு 8 மணிக்கு தீப ஆராதனை நடக்கிறது. நாளை(2ம் தேதி) காலை 5
மணிக்கு கணபதி ஹோமமும், 7.45 மணிக்கு மகாசண்டி ஹோமமும், காலை 11 மணிக்கு
வடுகு பூஜை, கஜபூஜை, கோ பூஜை, கன்யா பூஜை, சுகாசினி பூஜை நடக்கிறது.
தொடர்ந்து தீபாராதனை, அபிஷேகம் நடக்கிறது. 1.30 மணிக்கு அன்னதானமும், இரவு
6.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.ஏற்பாடுகளை துர்காம்பிகா தேவஸ்தானம்
டிரஸ்ட் செய்துள்ளனர்.