/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பெண்ணிடம் ரூ.9 ஆயிரம் அபேஸ் மதுரை பெண்கள் 3 பேர் கைது : தென்காசியில் துணிகரம்பெண்ணிடம் ரூ.9 ஆயிரம் அபேஸ் மதுரை பெண்கள் 3 பேர் கைது : தென்காசியில் துணிகரம்
பெண்ணிடம் ரூ.9 ஆயிரம் அபேஸ் மதுரை பெண்கள் 3 பேர் கைது : தென்காசியில் துணிகரம்
பெண்ணிடம் ரூ.9 ஆயிரம் அபேஸ் மதுரை பெண்கள் 3 பேர் கைது : தென்காசியில் துணிகரம்
பெண்ணிடம் ரூ.9 ஆயிரம் அபேஸ் மதுரை பெண்கள் 3 பேர் கைது : தென்காசியில் துணிகரம்
ADDED : ஆக 11, 2011 02:20 AM
தென்காசி : தென்காசியில் பஸ்சிற்காக காத்திருந்த பெண்ணிடம் 9 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த மதுரை பகுதியை சேர்ந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் பிச்சையா.
இவரது மனைவி ராமலட்சுமி (45). இவர் தென்காசி-செங்கோட்டை ரோட்டில் உள்ள பஸ்ஸ்டாப்பில் பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது அருகில் 3 பெண்கள் நெருங்கி வந்து பேசியுள்ளனர். ராமலட்சுமி அவர்களிடம் பேசி கொண்டிருந்த போது அவர் வைத்திருந்த பையில் இருந்த மணி பர்சை அப்பெண்கள் அபேஸ் செய்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் ராமலட்சுமி சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டு அருகில் நின்ற பயணிகள் மற்றும் பொதுமக்கள் 3 பெண்களையும் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பிடிபட்ட பெண்கள் மதுரை மேலூர் மில்கேட் தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி சாந்தி (37), இருமன்நாயக்கன்பட்டி பஞ்சமலை கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி லட்சுமி (39), பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மனைவி ரேவதி (29) என்றும் அவர்கள் 9 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்ததம் தெரிய வந்தது. பிடிபட்ட 3 பெண்களும் தென்காசி போலீசில் ஒப்படைக்கப்பட்டு புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி 3 பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.