Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ கைதிகளுக்கு ரூ.135; மோப்ப நாய்களுக்கு ரூ.200 எங்களுக்கு ரூ.50 தானா: விடுதி மாணவர்கள் கேள்வி

கைதிகளுக்கு ரூ.135; மோப்ப நாய்களுக்கு ரூ.200 எங்களுக்கு ரூ.50 தானா: விடுதி மாணவர்கள் கேள்வி

கைதிகளுக்கு ரூ.135; மோப்ப நாய்களுக்கு ரூ.200 எங்களுக்கு ரூ.50 தானா: விடுதி மாணவர்கள் கேள்வி

கைதிகளுக்கு ரூ.135; மோப்ப நாய்களுக்கு ரூ.200 எங்களுக்கு ரூ.50 தானா: விடுதி மாணவர்கள் கேள்வி

ADDED : மார் 17, 2025 01:27 AM


Google News
Latest Tamil News
சென்னை: 'ஒருங்கிணைந்த சமையல் அறை திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி மாணவ - மாணவியருக்கு, தனியார் வாயிலாக உணவு தயாரித்து வழங்குவதை கைவிட வேண்டும்' என, அரசுக்கு எஸ்.சி., - எஸ்.டி., விடுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்காக நடத்தப்படும், 1,331 பள்ளி, கல்லுாரி விடுதிகளில், 65,000க்கும் மேற்பட்டோர் தங்கி படிக்கின்றனர்.

1,500 ரூபாய்


பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,400; கல்லுாரி மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உணவுக்காக வழங்கப்படுகிறது.

தமிழக அரசு, 2023 - 2024ம் நிதியாண்டில், 'நகரப்பகுதியில் செயல்படும் மாணவர் விடுதிகளில், 7 கிலோ மீட்டருக்கு ஒரு சமையலறை அமைக்கப்பட்டு, தனியார் நிறுவனம் சார்பில் உணவு தயாரித்து, மாணவர்களுக்கு வழங்கப்படும்' என்று அறிவித்தது.

அதன்படி, சென்னையில் உள்ள 21 மாணவர் விடுதிகளில், ஒருங்கிணைந்த சமையல் அறை திட்டம், கடந்த ஆண்டு ஜனவரி முதல் செயல்பாட்டில் உள்ளது.

இதன்படி, சைதாப்பேட்டை மற்றும் வேப்பேரியில் உணவு தயாரிக்கப்பட்டு, வேனில் விடுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, மாணவ - மாணவியருக்கு வழங்கப்படுகிறது.

தரம் சரியில்லை


உணவின் சுவை, தரம் சரியில்லை என்று கூறும் மாணவர்கள், பழைய முறைப்படி விடுதியிலேயே சமைத்து வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

அடுத்த கட்டமாக, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த, அரசு தரப்பில் அறிவிப்பு வெளியான நிலையில், ஒரு மாணவருக்கு உணவுப்படி 50 ரூபாய் என்பதை, 100 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும்.

ஒருங்கிணைந்த சமையலறை திட்டத்தை கைவிட்டு, அந்தந்த விடுதிகளில் தரமான உணவு தயாரித்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி, மதுரை மாவட்டங்களில், விடுதி மாணவ - மாணவியர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, சென்னை விடுதி மாணவர்கள் கூறியதாவது:

ஒருங்கிணைந்த சமையல் அறை திட்டத்தின்படி, கடந்த ஓராண்டாக தரமற்ற உணவுகளை சாப்பிடுகிறோம். இரண்டு இடங்களில் தயாரிக்கப்படும் உணவு, விடுதிக்கு வருவதற்குள், உணவின் சுவை, தன்மை மாறி விடுகிறது. உணவின் அளவும் குறைவாக உள்ளது.

உயர்த்த வேண்டும்


விடுதிக்கு, அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது மட்டும் தரமான உணவு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருச்சி, கோவை விடுதி மாணவர்கள் சிலர் கூறுகையில், 'சிறை கைதிகளுக்கு ஒரு நாள் உணவுப்படியாக அரசு 135 ரூபாய் வழங்குகிறது.

'மோப்ப நாய்களுக்கு 20-0 ரூபாய் வழங்குகிறது. எங்களுக்கு மூன்று வேளை சாப்பாட்டுக்கு 50 ரூபாய் மட்டுமே அரசு வழங்குகிறது. எங்களுக்கான உணவுப்படியை குறைந்தபட்சம் 100 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us