உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு
UPDATED : செப் 21, 2011 08:26 PM
ADDED : செப் 21, 2011 08:22 PM
சென்னை : தமிழகத்தில், 2 கட்டமாக அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் <உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து, சென்னையில், மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் கூறியதாவது, வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22ம் தேதி துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 29ம் தேதி,வேட்புமனு பரிசீலனை 30ம் தேதி நடைபெறும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 3. அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ளது. முதன்முறையாக இந்த உள்ளாட்சி தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட ஓட்டுப்பதிவு அனைத்து மாநகராட்சிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் மற்ற பகுதிகளுக்கும் நடக்கவுள்ளது.