/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெற்பயிரை காப்பாற்ற பாளையங்காலில் தண்ணீர் திறந்துவிட மா.கம்யூ., செயலாளர் கோரிக்கைநெற்பயிரை காப்பாற்ற பாளையங்காலில் தண்ணீர் திறந்துவிட மா.கம்யூ., செயலாளர் கோரிக்கை
நெற்பயிரை காப்பாற்ற பாளையங்காலில் தண்ணீர் திறந்துவிட மா.கம்யூ., செயலாளர் கோரிக்கை
நெற்பயிரை காப்பாற்ற பாளையங்காலில் தண்ணீர் திறந்துவிட மா.கம்யூ., செயலாளர் கோரிக்கை
நெற்பயிரை காப்பாற்ற பாளையங்காலில் தண்ணீர் திறந்துவிட மா.கம்யூ., செயலாளர் கோரிக்கை
ADDED : ஆக 15, 2011 01:39 AM
திருநெல்வேலி : தண்ணீரின்றி வாடும் நெற்பயிரை காப்பாற்ற பாளையங்கால்வாயில் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பழனி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நெல்லை மாவட்டத்தில் பாளையங் கால்வாய், கன்னடியன் கால்வாய், நெல்லை கால்வாய், நதியுண்ணி கால்வாய் ஆகியவைகளில் கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் பாளையங் கால்வாயில் தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் விவசாயிகள் மனுக் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.எனவே கருகும் சூழ்நிலையில் உள்ள நெற்பயிர்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் பாளையங் கால்வாயில் அமலைச் செடிகளை அகற்றி, ஆக்ரமிப்புகளையும் அகற்றி தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


