ADDED : ஜூலை 13, 2011 10:07 PM
திருப்பூர் : மெல்வின் ஜோன்ஸ் லயன்ஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை
முகாம், திருப்பூரில் நடந்தது.
லயன்ஸ் கிளப் இயக்குனர் அருணாசலம் துவக்கி
வைத்தார். லோட்டஸ் கண் மருத்துவமனை டாக்டர்கள், பாரத் மெட்ரிக் பள்ளி
மாணவர்களுக்கு கண் பரிசோனை செய்தனர். 1,200 மாணவர்களுக்கு பரிசோதனை
செய்யப்பட்டது. மாவட்ட லயன்ஸ் கண் பாதுகாப்பு குழு தலைவர் சுப்ரமணி, லயன்ஸ்
அமைச்சரவை இணை செயலாளர் வின்சென்ட், மெல்வின் ஜோன்ஸ் கிளப் தலைவர் முரளி,
செயலாளர் மணி, இணை செயலாளர் ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


