/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கொட்டுப்பாளையம் பகுதியில் போர்வெல் அமைக்க கோரிக்கைகொட்டுப்பாளையம் பகுதியில் போர்வெல் அமைக்க கோரிக்கை
கொட்டுப்பாளையம் பகுதியில் போர்வெல் அமைக்க கோரிக்கை
கொட்டுப்பாளையம் பகுதியில் போர்வெல் அமைக்க கோரிக்கை
கொட்டுப்பாளையம் பகுதியில் போர்வெல் அமைக்க கோரிக்கை
ADDED : செப் 20, 2011 10:43 PM
புதுச்சேரி : கொட்டுப்பாளையத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க புதிய போர்வெல் அமைக்க வேண்டும் என, இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.
இந்திய கம்யூ., கொட்டுப்பாளையம் கிளை மாநாடு, ஏழுமலை தலைமையில் நடந்தது. நடந்த வேலைகள் குறித்து கிளை செயலாளர் செந்தில் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் சேதுசெல்வம் மாநாட்டுக் கொடியேற்றினார். கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் விசுவநாதன் மாநில அரசியல் நிலை குறித்து பேசினார். கூட்டத்தில், கிளை செயலா ளராக ஏழுமலை, துணை செயலா ளராக ஆனந்து, பொருளாளராக உதயகுமார், கமிட்டி உறுப்பினர்களாக செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சிவா, ரவி, பாலமுருகன், சுமதி, விஜயலட்சுமி, லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கொட்டுப்பாளையம் இசிஆர் பகுதியில் நகராட்சி மூலம் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் வகையில் மிகப் பெரிய மார்க்கெட் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது, அங்கு மீன் மார்க்கெட் மட்டும் கட்டப்படுகிறது. ஏற்கெனவே திட்டமிட்டதுபோல பல்பொருள் அங்காடி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி, பழைய சிமென்ட் சாலைகளைச் செப்பனிட வேண்டும். இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய போர் வெல் அமைக்கவும், எரியாத தெரு மின் விளக்குகளைசரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி ஏற்படும் மின் தடையைப் போக்க, புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தொகுதி செயலாளர் முருகன் கலந்து கொண்டார்.