ADDED : செப் 08, 2011 10:46 PM
தேனி : மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இன்று காலை 8 மணிக்கு, ஹாக்கி லீக் போட்டிகள், கம்மவார் சங்க தொழில்நுட்ப கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
பள்ளி, கல்லூரி ஹாக்கி லீக் அணி வீரர்கள் பங்கேற்கலாம். லீக் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். வெற்றி பெறும் அணியினர் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.