/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு அலுவலகங்களில் அடிப்படை வசதி அவசியம் பொதுமக்களுக்கு செய்து தர வேண்டும்அரசு அலுவலகங்களில் அடிப்படை வசதி அவசியம் பொதுமக்களுக்கு செய்து தர வேண்டும்
அரசு அலுவலகங்களில் அடிப்படை வசதி அவசியம் பொதுமக்களுக்கு செய்து தர வேண்டும்
அரசு அலுவலகங்களில் அடிப்படை வசதி அவசியம் பொதுமக்களுக்கு செய்து தர வேண்டும்
அரசு அலுவலகங்களில் அடிப்படை வசதி அவசியம் பொதுமக்களுக்கு செய்து தர வேண்டும்
ADDED : ஆக 03, 2011 01:29 AM
அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் விரைவான சேவையை பெற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மாதம்தோறும் சந்திப்பு கூட்டங்களை நடத்தி பொதுமக்களின் கருத்துகளையும், குறைகளையும் கேட்டறிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைதவிர, பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்தபோதும், அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு வசதி குறைபாடுகள் உள்ளன. பெரும்பாலான அலுவலகங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. இதனால், அலுவலகங்களுக்கு வரும் பொது மக்கள் தண்ணீருக்கு திண்டாடும் அவலம் உள்ளது. குறிப்பாக, கோடைக்காலங்களில் பொதுமக்களின் அவதிக்கு அளவே இல்லை. மேலும், பொதுமக்களுக்கு கழிப்பிட வசதிகளும் கிடையாது. இதனால், தூரத்தில் உள்ள ஊர்களில் இருந்தும், கிராமங்களிலும் இருந்து வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல, கழிப்பிட வசதி செய்து தரவும் நடவடிக்கைகள் தேவை. ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள், விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் வேலை முடியும், யாரிடம் முறையிடுவது போன்ற விபரங்கள் அடங்கிய குடிமக்கள் சாசனம் அரசு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் குடிமக்கள் சாசன புத்தகம் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. பொதுமக்கள் வலியுறுத்தி சென்று கேட்டால், ஸ்டோர் அறையில் தேடி தூசி தட்டி தரும் நிலை உள்ளது. பொதுமக்களுக்கு கையேடாக விளங்கும் குடிமக்கள் சாசன புத்தகம் அனைத்து அலுவலகங்களிலும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல அலுவலகங்களில் பொதுமக்கள் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு வசதியாக தொடுதிரை கம்ப்யூட்டர் வைக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்களுக்கு மிகுந்த உதவியாக இருந்தது. தற்போது, தொடுதிரை கம்ப்யூட்டர் பழுதடைந்து, காட்சிப் பொரு ளாக மாறி விட்டன. பழுதுநீக்கி, கம்ப்யூட்டர்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புடைய அனைத்து அரசு அலுவலகங்களிலும் தொடுதிரை கம்ப்யூட்டர் அமைத்தால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்.
-நமது சிறப்பு நிருபர்-