உண்டியல் பணம் முழுவதும் அதிகாரிகளுக்கு சம்பளமா?: எச்.ராஜா குமுறல்
உண்டியல் பணம் முழுவதும் அதிகாரிகளுக்கு சம்பளமா?: எச்.ராஜா குமுறல்
உண்டியல் பணம் முழுவதும் அதிகாரிகளுக்கு சம்பளமா?: எச்.ராஜா குமுறல்
ADDED : மார் 20, 2025 05:30 AM

பரமக்குடி: ''கோவில் உண்டியல் பணம் அனைத்தும், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகளின் சம்பளத்திற்கே போகிறது,'' என, எச்.ராஜா கூறினார்.
பரமக்குடியில் அவர் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில் மூன்று கோவில்களில், நெரிசலால் பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். திருச்செந்துாரில் பக்தர் இறந்த அடுத்த நாள், ராமேஸ்வரத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர் இறந்துள்ளார். அதற்கு அடுத்து, தஞ்சாவூரிலும் ஒருவர் இறந்துள்ளார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த துறை அமைச்சராக இருக்கும் வரை, இதற்கெல்லாம் எந்த தீர்வும் இருக்காது. இறந்தவரின் குடும்பத்தாரிடம் இருந்து, 'ஏற்கனவே அவருக்கு உடல் நலம் சரியில்லை' என, எழுதி வாங்கிக் கொண்டு, போலீசார் உடலை ஒப்படைத்துள்ளனர்.
கோவிலில் நுழைவது முதல் தரிசனம், அர்ச்சனை, அபிஷேகம் என அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கின்றனர். இவ்வளவு வசூல் செய்தும் பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை.
ஒரு இணை ஆணையருக்கு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கொடுக்கின்றனர். பக்தர்களின் உண்டியல் பணத்தில் பல கோடி ரூபாய் சம்பளத்திற்கு போகிறது. கோவில்களில் ஆம்புலன்ஸ், டாக்டர் வசதி தேவை.
தமிழக பாடநுால் கழகத்தில் முறைகேடு நடந்து, மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சினிமா பாடல் பாடும் ஒருவரை, பாடநுால் நிறுவன தலைவராக நியமித்தால் இப்படித்தான் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.