Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவில் ஆயிரம்

அறிவில் ஆயிரம்

அறிவில் ஆயிரம்

அறிவில் ஆயிரம்

PUBLISHED ON : செப் 16, 2011 12:00 AM


Google News

மழைக்கால வாஸ்து



மழைக்காலத்தில், மழை நீரினால் நன்றாகப் பராமரிப்பு இல்லாத செப்டிக் டாங்குகள் நிரம்பி வழிந்து பிரச்னையை ஏற்படுத்துகின்றன.செப்டிக் டாங்க் முறையாகப் பராமரிக்கா விட்டால் அவை தெருக்களை மட்டுமின்றி, அந்த வீட்டின் நிலத்தடி நீரையும் பாதிக்கும்.

செப்டிக் டாங்கும், ஆழ்துளைக் கிணறும் அருகருகே இருக்கும் போது, செப்டிக் டாங்கில் இருந்து வெளிவரும் நச்சுப் பொருளான நைட்ரோ புளோனிக் அமிலம், ஆழ்துளைக் கிணறின் நீரோடு கலக்கும் அபாயம் உள்ளது.செப்டிக் டாங்க் உள்ள வீடுகளில் ஆழ்துளைக் குழாய்க்கும், செப்டிக் டாங்க்கிற்கும் இடையே குறைந்தபட்சம் 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். வாயு மூலையில் செப்டிக் டாங்க் இருந்தால், ஈசான்ய மூலையில் தான் ஆழ்துளைக் கிணறு இருக்க வேண்டும் என நம் வாஸ்து சாஸ்திரமும் கூறுகிறது. இவ்வாறு இல்லாமல் பக்கத்தில் இருந்தால் ஏற்படும் பிரச்னைகள், பருவ மழைக் காலத்தில் தான் அதிகமாகின்றன.



தகவல் சுரங்கம்





ராக் இசை விழா



மேற்கத்திய இசையின் முக்கிய இசை வடிவம் ராக் ஆகும். இளைஞர்கள் அதிக அளவில் ராக் இசையை விரும்புகின்றனர். கர்நாடக இசைக்கு திருவையாறு, சென்னையில் இசை விழா நடக்கிறது. இந்துஸ்தானி இசை விழா ஒவ்வொரு ஆண்டும் குவாலியரில் நடக்கிறது. அதைப் போல, ராக் இசை விழாக்கள் செப்டம்பர் முதல், புத்தாண்டு வரை மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடக்கிறது. கோடை கால வாசஸ்தலமான ஷில்லாங்கிற்கு, அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு ராக் இசைக்குழுக்கள் வந்து ராக் இசை விழாவை நடத்துகின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் முக்கிய மையமாக ஷில்லாங் இருந்தது. அதன் தொடர்ச்சியால் இன்று வரை ராக் இசைக்கான ரசிகர்களும் ஷில்லாங்கில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ராக் இசை யோடு தொடர்புடைய வகுப்புகளும் ஷில்லாங்கில் அதிகளவில் நடத்தப்படுகின்றன. ஷில்லாங்கை 'அதிரும் ஷில்லாங்' என அழைக்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us