/உள்ளூர் செய்திகள்/மதுரை/பணியின் போது போதையில் ஓய்வெடுத்த எஸ்.ஐ.,பணியின் போது போதையில் ஓய்வெடுத்த எஸ்.ஐ.,
பணியின் போது போதையில் ஓய்வெடுத்த எஸ்.ஐ.,
பணியின் போது போதையில் ஓய்வெடுத்த எஸ்.ஐ.,
பணியின் போது போதையில் ஓய்வெடுத்த எஸ்.ஐ.,
ADDED : செப் 21, 2011 12:11 AM
மதுரை : மதுரையில் பணியின்போது போதையில் ஓய்வெடுத்த தெப்பக்குளம் சட்டம் ஒழுங்கு எஸ்.ஐ., சந்திரன், 40, மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நேற்று காலை இவருக்கு தெப்பக்குளம் 16 கால் மண்டபம் அருகே பணி ஒதுக்கப்பட்டது. அப்போது போதையில் இருந்த சந்திரன், நகர் உதவிகமிஷனர் துரைசாமி வந்தபோது 'சல்யூட்' அடித்துவிட்டு, மண்டபம் அருகே சிறுநீர் கழிக்கும் இடத்தில், மொய்க்கும் ஈக்களையும் பொருட்படுத்தாமல்
சீருடையுடன் காலை 10 மணிக்கு படுத்து ஓய்வெடுத்தார். இந்த தகவல் கமிஷனர் கண்ணப்பனுக்கு தெரியவர, உதவிகமிஷனர் துரைசாமியை அங்கு செல்லுமாறு 'வாக்கிடாக்கி'யில் உத்தரவிட்டார். இதை கேட்ட சக போலீஸ்காரர் ஒருவர், எஸ்.ஐ., சந்திரனுக்கு போன் போட, போதை பாதி இறங்கிய நிலையில், தொப்பியை தேடிப்பிடித்து தலையில் வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கை காக்க புறப்பட்டார்.
இதற்கிடையே கமிஷனர் உத்தரவிட்டதால் குழம்பிய உதவிகமிஷனர் துரைசாமி, 'இப்பதான் அங்கிருந்து (தெப்பக்குளம்) வந்தோம். அதற்குள் போதையில் யாரு படுத்து கிடக்கிறது' என மீண்டும் அங்கு செல்ல, எதுவும் நடக்காது போல் எஸ்.ஐ., சந்திரன் 'சல்யூட்' அடித்து வரவேற்றார். இதனால் மேலும் குழம்பிய உதவிகமிஷனர், சக போலீசாரிடம் விசாரிக்க உண்மை தெரிந்தது. இதைதொடர்ந்து, அவர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படஉள்ளது.