ADDED : ஆக 22, 2011 02:24 AM
மதுரை : மதுரையில் அபோடு தொண்டு நிறுவனத்தில் காங்., சார்பில் ஆதரவற்ற
குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாநகராட்சி காங்., குழு தலைவர்
சுப்புராம் தலைமை வகித்தார்.
மாநில அமைப்பு செயலாளர் காந்தி, பேராசிரியர்
கண்ணன் முன்னிலை வகித்தனர். நான்காவது வட்ட தலைவர் ஜெகநாதன் வரவேற்றார்.
நகர் தலைவர் தெய்வநாயகம், முன்னாள் எம்.பி., ராம்பாபு, மாநகராட்சி
கவுன்சிலர் சிலுவை அன்னதானம் வழங்கினர். 28வது வார்டு தலைவர் கந்தவேல்
நன்றி கூறினார்.