/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆவின் ஊழியர்கள் ஸ்டிரைக்பால் தட்டுப்பாடு ஏற்படுமாஆவின் ஊழியர்கள் ஸ்டிரைக்பால் தட்டுப்பாடு ஏற்படுமா
ஆவின் ஊழியர்கள் ஸ்டிரைக்பால் தட்டுப்பாடு ஏற்படுமா
ஆவின் ஊழியர்கள் ஸ்டிரைக்பால் தட்டுப்பாடு ஏற்படுமா
ஆவின் ஊழியர்கள் ஸ்டிரைக்பால் தட்டுப்பாடு ஏற்படுமா
ADDED : செப் 20, 2011 10:31 PM
தேனி:தேனி ஆவின் ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.
பால்
தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.தேனி ஆவின் பால்
குளிரூட்டும் நிலையத்தில் 33 பணியாளர்கள் கடந்த 1995ம் ஆண்டு வேலை வாய்ப்பு
அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டனர். மதுரை உட்பட வேறு நகரங்களில்
இவர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டனர். தேனி மாவட்டத்தில் இன்னும் நிரந்தரம்
செய்யப்படவில்லை.பணி நிரந்தரம் கேட்டு தேனி ஆவின் ஊழியர்கள் இன்று முதல்
ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதனால் நிரந்தர ஊழியர்களை கூடுதலாக நியமித்து
பால் உற்பத்தி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆவின்
நிர்வாகம் தெரிவித்துள்ளது.