/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குடிநீர் உறிஞ்சியமோட்டார்கள் பறிமுதல்குடிநீர் உறிஞ்சியமோட்டார்கள் பறிமுதல்
குடிநீர் உறிஞ்சியமோட்டார்கள் பறிமுதல்
குடிநீர் உறிஞ்சியமோட்டார்கள் பறிமுதல்
குடிநீர் உறிஞ்சியமோட்டார்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 13, 2011 01:41 AM
சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் நகராட்சியில் குடிநீர் உறிஞ்சியதாக 12 மின்
மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில்
குடிநீர் வினியோகத்தின் போது குழாயில் மின் மோட்டார்களை பொருத்தி குடிநீரை
உறிஞ்சுவதாக புகார் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று நகராட்சி கமிஷனர்
செந்தில்முருகன், இன்ஜினியர் வாசுதேவன், ஒவர்சியர் சிவசுப்பிரமணியன்,
மேற்பார்வையாளர் முத்துப்பாண்டியன் ஆகியோர் கக்கன்நகர், அண்ணாநகர்,
ஓடைத்தெரு, முத்துராமலிங்கம் தெரு ஆகிய இடங்களில் குடிநீர் வினியோகத்தின்
போது சோதனை செய்தனர். அப்போது குடிநீர் குழாயில் குடிநீரை உறிஞ்சியதாக 12
மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.