ADDED : ஆக 13, 2011 04:38 AM
திருப்பாச்சேத்தி : மதுரையில் இருந்து பரமக்குடி சென்ற தனியார் பஸ் (கிருஷ்ணவேணி) திருப்பாச்சேத்தி அருகே உள்ள தூதை விலக்கில் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.
பஸ்சில் இருந்த சுள்ளங்குடியை சேர்ந்த கல்லூரி மாணவி சுகன்யா (22) இறந்தார். பயணம் செய்த 20 பயணிகள் காயமடைந்தனர். மதுரை டிரைவர் முருகேசனை திருப்பாச்சேத்தி போலீசார் கைது செய்தனர்.