/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/"அட்மா' திட்டத்தில் விவசாயிகள் சுற்றுலா"அட்மா' திட்டத்தில் விவசாயிகள் சுற்றுலா
"அட்மா' திட்டத்தில் விவசாயிகள் சுற்றுலா
"அட்மா' திட்டத்தில் விவசாயிகள் சுற்றுலா
"அட்மா' திட்டத்தில் விவசாயிகள் சுற்றுலா
ADDED : ஆக 28, 2011 11:26 PM
விழுப்புரம் : மயிலம் வட்டார வேளாண்மை அலுவலகம் விவசாயிகள் மாநில அளவில் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
மயிலம் வட்டார வேளாண் துறை மூலம் 'அட்மா' திட்டத்தின் கீழ் விவசாயிகள் மாநில அளவில் 3 நாள் சுற்றுலா சென்றனர். வேளாண்மை உதவி இயக்குனர் வேலாயுதம் தலைமையில் 50 விவசாயிகள் இச்சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இக்குழுவினர் சின்னசேலம் ஆட்டுப்பண்ணை, கோவை கொடிசியா அரங்கில் உள்ள சர்வதேச விவசாய பொருட்காட்சி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் உள்ளிட்ட விவசாய தொடர்பான பல்வேறு இடங்களை நேரில் பார்த்து விவசாய திட்டங்களை அறிந்து கொண்டனர். இதில் வேளாண் அலுவலர் பொற்செழியன், உதவி வேளாண்மை அலுவலர்கள் புரு÷ஷாத்தமன், விமலா, மகாலட்சுமி, சத்யா, சுதா மற்றும் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.