தேர்தலின்றி பார்லிமென்ட் குழு தலைவர்கள் நியமனம்?
தேர்தலின்றி பார்லிமென்ட் குழு தலைவர்கள் நியமனம்?
தேர்தலின்றி பார்லிமென்ட் குழு தலைவர்கள் நியமனம்?
UPDATED : ஆக 05, 2024 03:05 AM
ADDED : ஆக 05, 2024 01:36 AM

புதுடில்லி: பார்லிமென்ட்டின் பல்வேறு குழுக்களுக்கான தலைவர்கள் சிலர் தேர்தலின்றி நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்லிமென்டில் பொது கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு, எஸ்.டி.,எஸ்.சி. மற்றும் பழங்குடியினருக்கான நலக்குழு, பிற்படுத்தப்பட்டோருக்கான நலக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. இக்குழுவில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.க்கள் உறுப்பினர்களாகவும், ஒரு தலைவரும் நியமிக்கப்படுவர்.
இந்நிலையில் இக்குழுவில் தேர்தலின்றியும், போட்டியின்றியும் தலைவர்கள் தேர்வானதாக தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சியுள்ள தலைவர்களை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா நியமிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.