ADDED : ஆக 11, 2011 02:50 AM
புதுச்சேரி:முதலியார்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் தேசிய கிராமப்புற
சுகாதார இயக்கம் இணைந்து, கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழாவை நேற்று
நடத்தியது.நூறடி சாலை கணேஷ் திருமண நிலையத்தில் நடந்த விழாவிற்கு, டாக்டர்
கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
சுகாதார ஆய்வாளர் ராஜன்பிரசாத்
வரவேற்றார். பாஸ்கர் எம்.எல்.ஏ., சுகாதாரத் துறை அதிகாரிகள் பிரகாஷ்,
நிலாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.