/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க தடை மனு தள்ளுப்படிபஸ் ஸ்டாண்ட் விரிவாக்க தடை மனு தள்ளுப்படி
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க தடை மனு தள்ளுப்படி
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க தடை மனு தள்ளுப்படி
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க தடை மனு தள்ளுப்படி
ADDED : செப் 21, 2011 11:28 PM
சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு தடை கோரிய மனு, மதுரை ஐகோர்ட் கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டதால்,பஸ் ஸ்டாண்ட் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.சிவகாசி பஸ் ஸ்டாண்ட் இடநெருக்கடியில் உள்ளது.
பஸ் ஸ்டாண்ட் யொட்டிய கிழக்கு பகுதியில் ரவிசங்கர் என்பவருக்கு சொந்தமான 52 சென்ட் இடத்தை, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு வழங்க கோரினர். சிவகாசி ஆர்.டி.ஓ., இடத்தை கைப்பற்றினார். நஷ்ட ஈடாக நகராட்சி மூலம் ரூ.27 லட்சத்தை, சிவகாசி ஆர்.டி.ஓ.,விடம் டெபாசிட் செய்யப்பட்டது. இதனிடையே இடத்தின் உரிமையாளர், கூடுதல் தொகை வழங்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் முடங்கியது.இந்நிலையில், இடத்தை நகராட்சிக்கு ஒப்படைக்க கோர்ட் கடந்த மாதம் உத்தரவிட்டது. இடத்தை கையகப்படுத்தி ஒழுங்கு படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. தீர்ப்பை எதிர்த்து இட உரிமையாளர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்தார் . இடத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இவரது மனு கடந்த 8ல் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ், இட உரிமையாளர் ரவிசங்கரின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க இட பிரச்னை முடிவுக்கு வந்தது.
நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில், '' பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க இடம் தொடர்பான தீர்ப்பு, நகராட்சிக்கு சாதகமாக வந்துள்ளதை தொடர்ந்து ,விரைவில் விரிவாக்க பணி மேற்கொள்ளப்படும் ,''என்றார்.