/உள்ளூர் செய்திகள்/மதுரை/தலைமையாசிரியருக்கு எதிரான வழக்கு :ஐகோர்ட் கிளை உத்தரவுதலைமையாசிரியருக்கு எதிரான வழக்கு :ஐகோர்ட் கிளை உத்தரவு
தலைமையாசிரியருக்கு எதிரான வழக்கு :ஐகோர்ட் கிளை உத்தரவு
தலைமையாசிரியருக்கு எதிரான வழக்கு :ஐகோர்ட் கிளை உத்தரவு
தலைமையாசிரியருக்கு எதிரான வழக்கு :ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : ஆக 11, 2011 03:45 AM
மதுரை : மதுரை மாவட்டம் பொதும்பு உயர்நிலை பள்ளியில் மாணவியிடம் தலைமையாசிரியர் தகாத முறையில் நடந்தது குறித்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய வேண்டி விசாரணையை ஆக., 22க்கு ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது.பொதும்பை சேர்ந்த வீர்சாமி தாக்கல் செய்த ரிட் மனுவில், ''மகள் பொதும்பு உயர்நிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்.
அவரிடம் தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி தவறாக நடக்க முயன்றார். இதற்கு ஆசிரியர்கள் அமலிரோஸி, சண்முககுமாரசாமி உடந்தை. இதுகுறித்து ஒரு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்,'' என கோரினார். இதுகுறித்து குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.அக்குழு நேற்று நீதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மனு செய்தனர். அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஐசக்மோகன் லால், சாமிதுரை, ஆனந்தவள்ளி ஆஜராயினர். அவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆக., 22க்கு தள்ளிவைத்தது.