முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்: இந்தியா
முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்: இந்தியா
முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்: இந்தியா

கமாண்டோர் ரகு நாயர்
கடல், வான் மற்றும் நிலத்தில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்த இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. நமது நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் உறுதிபூண்டுள்ளோம். மேலும் எப்போதும் விழிப்புடனும் தயார் நிலையிலும் முப்படைகள் இருக்கும்.
விங் கமாண்டர் வியோமிகா சிங்
இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. எந்த மத வழிபாட்டு தலத்தையும் இந்தியா குறிவைக்கவில்லை.இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு அளித்த பதிலடியில் அந்நாட்டிற்கு கடுமையான மற்றும் தாங்க முடியாத இழப்பு ஏற்பட்டு உள்ளது. நிலம் மற்றும் வானில் ஏராளமான இழப்புகளை ஏற்பட்டு உள்ளது. ஸ்கார்து, ஜகோபாபாத் மற்றும் போலாரி என பாகிஸ்தானின் முக்கியமான விமானபடை தளங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.