ADDED : செப் 09, 2011 01:27 AM
ப.வேலூர்: ப.வேலூர் அருகே தீக்காயமடைந்த விவசாயி ஒருவர், மருத்துவமனையில்
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.ப.வேலூர் அருகே
சிறுகடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி லோகநாதன்(25).
அவர், கடந்த மாதம்
27ம் தேதி இரவு வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த
மண்ணெண்ணெய் விளக்கு கீழே விழுந்தது.அதில் ஏற்பட்ட தீ லோகநாதனின் உடல்
முழுவதும் பரவியது. விபத்தில் படுகாயமடைந்த லோநாதன், கோவையில் உள்ள தனியார்
மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை பலனின்றி
நேற்று பரிதாபமாக உயரிழந்தார். சம்பவம் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீஸார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.