பட்ஜெட் யாருக்கு பலன் - யாருக்கு நஷ்டம்
பட்ஜெட் யாருக்கு பலன் - யாருக்கு நஷ்டம்
பட்ஜெட் யாருக்கு பலன் - யாருக்கு நஷ்டம்
ADDED : ஜூலை 23, 2024 07:45 PM

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2024 - 25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) தாக்கல் செய்தார்.
இன்றைய பட்ஜெட்டில் அறிவிப்பில் வரிச்சலுகைகள், தங்கம், வெள்ளி, மொபைல்போன் மீதான சுங்க வரி குறைப்பு போன்றவை அறிக்கப்பட்டன.
பட்ஜெட் அறிவிப்பு யாருக்கு லாபம்:
* இளைஞர்கள் .
இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு, 20 லட்சம் இளைஞர்களை பணி திறனோடு உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் ஆயிரம் பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்.
*கூட்டணி கட்சியினர்.
பீஹார் மாநிலத்தில் புதிய விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். ஆந்திரா மறுசீரமைப்புக்கு சிறப்பு திட்டம் வகுக்கப்படும். அமராவதி நகர வளர்ச்சி கட்டமைப்புக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நடுத்தர வர்க்கத்தினர்.
இந்த பட்ஜெட்டால் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படவில்லை.
* ஸ்டார்டப் நிறுவனங்கள்.
வளர்ச்சியடைந்த தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமில்லாது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் 2024 மத்திய பட்ஜெட்டில் ஏஞ்சல் வரி முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலுக்கான நிதி வரத்தை அதிகரிக்கும் மற்றும் நிறுவனர்களுக்கான வரி இணக்க சுமையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* தங்க நகை மற்றும் ஆபரண தொழில் துறை.
தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக,
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2,080 குறைந்து ரூ.52,400 ஆகவும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.260 குறைந்து , ரூ.6,550 ஆகவும் ,வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.3,100 குறைந்து ரூ.92,500 ஆக விற்பனை ஆகிறது.
தவிர உள்ளூர் உற்பத்தி துறையினர். ஏழைகள், பெண்கள், மற்றும் விவசாயிகளுக்கான பலனையும் வலியுறுத்துகிறது.
பட்ஜெட் அறிவிப்பு: யாருக்கு நஷ்டம்
பங்குசந்தைகள்
பங்கு பத்திர பரிவர்த்தனை வரி (செக்யூரிட்டிஸ் டிரான்ஸாக்ஷன் டாக்ஸ்) 0.02 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்த சில வினாடிகளில் பங்குச்சந்தைகளில் புள்ளிகள் குறையத் துவங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப பெற்று வந்ததாலும் பங்குச்சந்தை புள்ளிகள் குறைந்தன
மின்சார வாகனங்கள்
மத்திய அரசின் மின்சார வாகன (EV) உற்பத்தி திட்டமான - FAME' திட்டத்திற்கு இந்த ஆண்டு மத்திய அரசு நிதியை குறைத்து ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு 15 சதவீதமாகத் தான் இருக்கிறது. இன்னும் குறைவாக 2 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக உற்பத்தி தடைபட்டுள்ளது.