ADDED : செப் 15, 2011 11:57 PM
சென்னை:திரையரங்க உரிமையாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை:தமிழக சட்ட சபையில் நேற்று அறிவித்த கேளிக்கை வரி உயர்வு தமிழ் திரையுலகை பாதிக்கும்.
பல திரையரங்குகள் மூடும்நிலை உருவாகும். சம்பளம், மின்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உயர்ந்துள்ள நிலையில் கேளிக்கை வரி உயர்வு, நிகர வசூலை குறைத்துவிடும். இதனால், கேளிக்கை வரியை குறைக்க வேண்டும்.அது போல், பல வருடங்களாக உயர்த்தப்படாமல் உள்ள நுழைவுக் கட்டணங்களை ஏ.சி.,திரையரங்கில் 20முதல் 100 ரூபாயாகவும், சாதாரண திரையரங்கில் 15 முதல் 70 ரூபாயாக உயர்த்த வேண்டும். நுழைவுக் கட்டணத்தையும் கேளிக்கை வரியையும் தனித்தனியே வசூலிக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


