PUBLISHED ON : ஜூலை 12, 2011 12:00 AM
குதிரைகளால் பரவும் நோய்
நாய்கள், பூனைகளின் மூலமாக பரவும் ரேபிஸ் பற்றி, பரவலான விழிப்புணர்வு உள்ளது. அதனை போல குதிரைகளில் ஏற்படும் கிளாண்டர்ஸ் கட்டி நோய், மனிதர்களையும் பாதிக்கும். நாய், கரடி, பூனை, ஓநாய் போன்ற விலங்குகள் நோய் பாதித்து, இறந்த குதிரைகளை உண்வதன் மூலம் இந்நோய் வேகமாக பரவுகிறது. குதிரை களில் இருந்து வெளியேறும் சிறுநீர், சளி, சாணம், திரவம் போன்றவற்றின் வழியாக இது மற்ற குதிரை களுக்குப் பரவுகிறது. 'கிளாண்டர்ஸ் கட்டி நோய்' மனிதர்களுக்கு உயிரிழப்பையும் ஏற்படுத்தும். கிளாண்டர்ஸ் கட்டி நோய் பாதித்த குதிரை களுக்கு, சிகிச்சை செய்யப்படாமல் கருணைச் சாவே பரிந்துரை செய்யப்படுகிறது. இரு நாடு களுக்கு இடையே போர் ஏற்படும் போது, ஆந்தராக்ஸ் கிருமிகளைப் போன்று, கிளாண்டர்ஸ் கட்டி நோய் கிருமிகளை உயிர்க்கொல்லி ஆயுதமாக பயன்படுத்தலாம். இரண்டாம் உலகப் போரில் இந்த முறை பயன்படுத்தப்பட்டது.
தகவல் சுரங்கம்
பழமைக்குப் பெருமை
இந்தியாவில், ஜெய்ப்பூரில் நகரின் மையத்தில் உள்ள கட்டடங்கள் அனைத்துக்கும் 'இளஞ் சிவப்பு' நிறம் அடிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதன் மூலமாக, அந்நகரின் பாரம்பரியம் பாதுகாக்கப்படுகிறது. இதனைப் போலவே, யூனியன்பிரதேசமான டில்லியும் பாரம்பரியத்தை காக்கும் வகையில் ஒரு முடிவை எடுத்துள்ளது.
டில்லியில் சொந்த வீடு உள்ளவர்கள், தங்களுடைய வீட்டை புதுப்பித்து, அவற்றை ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அல்லது கடைகளாக மாற்றலாம். இவ்வாறு மாற்றும் போது, டில்லியின் பழமையான கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டட அமைப்பு இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் அவர்கள் உரிமம் பெற அதிக தொகை செலுத்த வேண்டியது இல்லை. பழமையை வெளிப்படுத்தும் வகையில், கட்டடங்கள் கட்டுபவர்களுக்கு அரசு, சலுகைகள் தரவும் தயாராக உள்ளது.