குஜராத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு: இப்போதே வரிந்து கட்டும் காங்., - பா.ஜ.,
குஜராத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு: இப்போதே வரிந்து கட்டும் காங்., - பா.ஜ.,
குஜராத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு: இப்போதே வரிந்து கட்டும் காங்., - பா.ஜ.,
ADDED : ஜூலை 13, 2011 12:51 AM
ஆமதாபாத்:குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், இப்போதே ஆளும் பா.ஜ.,வும் எதிர்க்கட்சியான காங்கிரசும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் பணிகளில் குதித்துள்ளன.குஜராத்தில், அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பா.ஜ.,வும் காங்கிரசும் இப்போதே போட்டி போட்டிக் கொண்டு, தேர்தலை சந்திக்கத் தயாராகியுள்ளன. மாநிலத்தில், தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் இது.பா.ஜ.,வில், 2007ல் சட்டசபைத் தேர்தலின் போது கட்சியில் இருந்து வெளியேறியவர்களை உள்ளே இழுக்கும் பணி துவங்கி விட்டது.
எம்.எல்.ஏ., பாலு டன்டி ஏற்கனவே கட்சியில் சேர்க்கப்பட்டு விட்டார். மற்றோர் எம்.எல்.ஏ.,வான சுனில் ஓசா, விரைவில் சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.அதேநேரம், மாநிலத்தின், 182 தொகுதிகளிலும், கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, 1,800 கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், காங்கிரசுக்கு இடம் அளிக்கும் வகையில், பா.ஜ., தொண்டர்கள், பிரமுகர்கள் ஊழலில் ஈடுபட வேண்டாம் என, உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.
காங்கிரசைப் பொருத்தவரை, அதன் புதிய மாநிலத் தலைவராக அர்ஜுன் மோத்வாடியா, சமீபத்தில் தான் பொறுப்பேற்றார். கட்சியை சீரமைப்பது, மாநில முதல்வர் மோடி தலைமையிலான பா.ஜ.,வைத் தாக்குவது என, இரு முக்கிய வேலைகள் காங்கிரசுக்கு உள்ளன.இதற்காக அர்ஜுன், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தொண்டர்களை சந்தித்து வருகிறார். உட்கட்சிப் பூசல்களை ஒதுக்கி விட்டு, தேர்தல் வெற்றிக்காகப் பாடுபடும் படி கேட்டுக் கொண்டு வருகிறார். தாலுகா வாரியாக கட்சி அலுவலகங்களைத் திறப்பதன் மூலம், கட்சியை மேம்படுத்த முயல்கிறார்.