'கே.ஒய்.சி., கேட்டு தொந்தரவு செய்யாதீர்': வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., கவர்னர் அறிவுறுத்தல்
'கே.ஒய்.சி., கேட்டு தொந்தரவு செய்யாதீர்': வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., கவர்னர் அறிவுறுத்தல்
'கே.ஒய்.சி., கேட்டு தொந்தரவு செய்யாதீர்': வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., கவர்னர் அறிவுறுத்தல்
ADDED : மார் 19, 2025 04:53 AM

மும்பை: கே.ஒய்.சி., ஆவணங்களைக் கேட்டு, வாடிக்கையாளர்களை திரும்ப, திரும்ப அழைப்பதை தவிர்க்குமாறு, வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கே.ஒய்.சி., எனப்படும் 'வாடிக்கையாளர் விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்' என்ற ஆவணப் பதிவுக்காக, வாடிக்கையாளர்களை மீண்டும், மீண்டும் அழைப்பதை வங்கிகள் தவிர்க்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் ஒரு நிதி நிறுவனத்துக்கு ஆவணங்களை சமர்பித்த பின், மீண்டும் அதே ஆவணங்களை அவர்களிடம் இருந்து வாங்க வேண்டிய அவசியமில்லை.
மத்திய தரவு தளத்தில் இருந்து வாடிக்கையாளரின் விபரங்களை வங்கிகள் பெற இயலும். ஆனால், பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தங்கள் கிளைகள் அல்லது அலுவலகங்களை, மத்திய தரவு தளத்தில் இருந்து தகவல்களை பெற அனுமதிப்பதில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் இத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
கே.ஒய்.சி., மறுசமர்பிப்பு கோரிக்கைகளால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்த புகார்கள் நாளுக்கு நாள் ரிசர்வ் வங்கிக்கு அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதை தவிர்க்க, வங்கிகள் தங்களின் குறை தீர்க்கும் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். புகார்களுக்கான தீர்வுகளுக்காக, வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் முதல் கிளை மேலாளர்கள் வரை, ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். இவ்வாறு மல்ஹோத்ரா தெரிவித்தார்.