ADDED : ஜூலை 31, 2011 11:16 PM
கம்பம் : கம்பத்தில் மீண்டும் டிராபிக் சிக்னல் செயல்படத் துவங்கியுள்ளது.
தமிழக கேரள மாநிலங்களை இணைக்கும் எல்லையோர நகரமாக கம்பம் விளங்குகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, போக்குவரத்து நெரிசல் ஏற்படத் துவங்கியது. போக்குவரத்து நெரிசலை சரிபண்ண போலீசார் பல நடவடிக்கைகள் எடுத்தும் பலன் இல்லை. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தானியங்கி டிராபிக் சிக்னல் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சிக்னல் செயல்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று திடீரென செயல்படாமல் இருந்த சிக்னல் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது. வாகனம் நிறுத்தும் நேரம் அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் கூறினர். தொடர்ந்து தானியங்கி சிக்னல் செயல்பட டிராபிக் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.