அதிபர் டிரம்பின் புதிய வரிகள்: மருந்துகளுக்கு 100%, பர்னிச்சருக்கு 30% கனரக லாரிகளுக்கு 25%: பாதிப்பு யாருக்கு?
அதிபர் டிரம்பின் புதிய வரிகள்: மருந்துகளுக்கு 100%, பர்னிச்சருக்கு 30% கனரக லாரிகளுக்கு 25%: பாதிப்பு யாருக்கு?
அதிபர் டிரம்பின் புதிய வரிகள்: மருந்துகளுக்கு 100%, பர்னிச்சருக்கு 30% கனரக லாரிகளுக்கு 25%: பாதிப்பு யாருக்கு?

வாஷிங்டன்: மருந்துகளுக்கு 100%, பர்னிச்சருக்கு 30% கனரக லாரிகளுக்கு 25% இறக்குமதி வரிகளை விதித்து அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.
அக்டோபர் 1ம் தேதி முதல் மருந்து பொருட்களின் இறக்குமதிக்கு அதிபர் டிரம்ப் 100 சதவீத வரியை அறிவித்தார். இது இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அக்டோபர் 1ம் தேதி முதல், எந்தவொரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்புக்கும் 100% வரி விதிப்போம்.
ஒரு நிறுவனம் அமெரிக்காவில் தங்கள் மருந்து உற்பத்தி ஆலையைக் கட்டவில்லை என்றால், வரி விதிக்க திட்டமிட்டு இருக்கிறோம். மருந்து நிறுவனம் கட்டுமானங்களை தொடங்கினால் இந்த மருந்துப் பொருட்களுக்கு எந்த வரியும் இருக்காது. இவ்வாறு அந்த பதிவில் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அதேபோல், அக்டோபர் 1ம் தேதி முதல் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரியும், பர்னிச்சருக்கு 30 சதவீத வரியும், கனரக லாரிகளுக்கு 25 சதவீத வரியும் அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ளார்.
பாதிப்பு யாருக்கு?
இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு, குறிப்பாக மலிவு விலை ஜெனரிக் மருந்துகள் துறையில், அமெரிக்கா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. 2024ம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவிற்கு $3.6 பில்லியன் (ரூ. 31,626 கோடி) மதிப்புள்ள மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்தது.
நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் $3.7 பில்லியன் (ரூ.32,505 கோடி) மதிப்புள்ள மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்தது. இந்த புதிய வரி விதிப்பு இந்திய மருந்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.