/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குடிசை மாற்று வாரிய நலச்சங்க பொதுக்குழுகுடிசை மாற்று வாரிய நலச்சங்க பொதுக்குழு
குடிசை மாற்று வாரிய நலச்சங்க பொதுக்குழு
குடிசை மாற்று வாரிய நலச்சங்க பொதுக்குழு
குடிசை மாற்று வாரிய நலச்சங்க பொதுக்குழு
ADDED : ஜூலை 11, 2011 11:39 PM
புதுச்சேரி : புதுச்சேரி குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம், குடிசைமாற்று வாரிய அலுவலகத்தில் நடந்தது.
மாநில அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சேஷாசலம் தலைமை தாங்கினார். பொதுப்பணித் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் தனராஜ் முன்னிலை வகித்தார். நலச்சங்கத் தலைவர் ஆண்ட்ரூஸ் மில்லர் வரவேற்றார். சங்க பொருளா ளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சங்க பொதுச் செயலாளர் சேகர் நன்றி கூறினார். கூட்டத்தில், குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் மீதுள்ள அடாக் பேசிக் நிலையை முன் தேதியிட்டு பணி ஒழுங்கு செய்ய வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வுக்கு சமாமான சம்பள உயர்வு வழங்க வேண்டும். சீனியாரிட்டி பட்டியல் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நியமன விதியை அளிக்க வேண்டும். தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் மற்றும் தகுதியான தினக்கூலி ஊழியர்களுக்கு தற்காலிக பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.