ADDED : ஆக 01, 2011 01:28 AM
திருக்கோவிலூர் : லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் இறந்தார்.திருக்கோவிலூர் அடுத்த மேலத்தாழனூரைச் சேர்ந்த சண்முகம் மகன் சக்திவேல்,24.
இவரது நண்பர் ஏழுமலை. இருவரும் கடந்த 29ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் திருக்கோவிலூர் வந்து கொண்டிருந்தனர். சந்தப்பேட்டை பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சக்திவேல் பரிதாபமாக இறந்தார். ஏழுமலை பலத்த காயமடைந்தார்.புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.