ADDED : ஜூலை 16, 2011 02:36 AM
திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த மேல்மாவிலங்கை பகுதியில் வசிப்பவர் குட்டி.
இவரது மகன்கள் சம்பத்(35), அபிமன்யூ(32).
இவர்களிடையே ஏற்பட்ட
நிலப்பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அபிமன்யூ தனது
அண்ணி சரளாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில்
வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து அபிமன்யூவை கைது செய்தனர்.