ADDED : செப் 06, 2011 12:54 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாநில கட்டடத் தொழிலாளர் சங்க நான்காம் ஆண்டு துவக்க விழா கல்மேட்டில் நடந்தது.
சங்க கவுரவத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தலைவர் பாலையா வரவேற்றார். செயலாளர் செல்வராசு, தீர்த்தமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் வீரப்பன் வாழ்த்திப் பேசினார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் கட்டடத் தொழிலாளர் சங்கத் தலைமை நிர்வாகிகள் ஆறுமுகம், கணேசமூர்த்தி, நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆலோசகர் திருநாவலன் நன்றி கூறினார்.